Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
தக்காளியுடன் இந்த 2 பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Tomato Green Chilli Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சட்னி தான் சரியான காம்பினேஷனாக இருக்கும். சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், தக்காளி சட்னியே பெரும்பாலானோரின் விருப்பமான சட்னியாக இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சட்னியையே பலவாறு சமைக்கலாம். இந்த தக்காளி சட்னியுடன் ஒவ்வொரு பொருளை கூடுதலாக சேர்க்கும் போது அதன் சுவையில் வித்தியாசம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இன்று நாம் ஒருவிதமான தக்காளி சட்னியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த தக்காளி சட்னி செய்வதற்கு சில பொருட்களே போதுமானது. இந்த தக்காளி சட்னியில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைக்க வேண்டும். இது இந்த சட்னிக்கு தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இப்படி ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த பச்சை மிளகாய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மிளகாய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 பழுத்த தக்காளி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 3 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
- 3 பல் பூண்டு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
- எண்ணெய் சூடானதும் 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வதக்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் நறுக்கிய 2 தக்காளியை சேர்க்கவும்.
- தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியவுடன் ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்க்கவும்.
- கொத்தமல்லி சுருங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
- உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதை சட்னியில் கொட்டி நன்றாக கலக்கினால் சுவையான தக்காளி பச்சை மிளகாய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
