Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
Sweet Rava Appam Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான, அதே சமயம் பசியைப் போக்கும் வகையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா அப்பம் செய்து கொடுங்கள். இந்த ரவா அப்பம் செய்வதற்கு ரவையும், வாழைப்பழமும் இருந்தாலே போதும்.
முக்கியமாக இந்த ரவா அப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும். அதோடு இந்த ரவா அப்பத்தை ஒருமுறை செய்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது சட்டென்று ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், இதை செய்யலாம். இதனால் நல்ல பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு ரவா அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா அப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* வாழைப்பழம் - 1
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* வறுத்த கருப்பு எள்ளு - 1 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவை, நன்கு கனிந்த 1 வாழைப்பழம், 2
டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 ஏலக்காய் ஆகியவற்றை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு சேர்த்து, 1/2 கப்
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை சேர்த்து, மூடி வைத்து 30 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து, அத்துடன் வறுத்த கருப்பு எள்ளு விதைகளை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 சிட்டிகை ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி,
பணியார மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் நல்லெண்ணெயை
ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, மிதமான தீயில் வைத்து,
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான இனிப்பு
ரவா அப்பம் தயார்.



Click it and Unblock the Notifications