Latest Updates
-
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..!
Saturn Moon Conjunction Make Vish Yog 2026: நவகிரகங்களில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். கடக ராசியின் அதிபதியான சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் சந்திரன். அந்த வகையில் சந்திரன் அக்டோபர் 23 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் அடுத்த 2 நாட்கள் இருப்பார். மீன ராசியில் சந்திரன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே நீதிமான் சனி பகவான் இருப்பதால், சனியுடன் சந்திரன் சேர்ந்து விஷ யோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தின் படி, விஷ யோகம் ஒருவரது உணர்ச்சிகள், முடிவெடுக்கும் திறன், வேலை மற்றும் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு செலவுகள், உறவுகள் மற்றும் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷ யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக எந்த ஒரு அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பொறுமையும், நேர்மையும் மிகவும் அவசியம். இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். திடீரென்று பெரிய செலவுகள் வரக்கூடும். இதன் காரணமாக உங்களின் பட்ஜெட் பாழாகி, கடன் வாங்க வேண்டிய சூழல் கூட உருவாகலாம். வியாபாரம் செய்பவர்கள் இக்காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியாமல் போகலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் சிரமங்களை சந்தித்தாலும், இலக்கில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 நாட்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். நடத்தையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக வேலை விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளானது பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே அடுத்த 2 நாட்கள் பொறுமை மிகவும் முக்கியம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களை நம்பி யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள். முக்கியமாக நிறைய பணத்தை ஈட்டலாம் என்று ரிஸ்க் எடுத்து முதலீடுகளை செய்தால் இழப்பு மட்டும் தான் மிஞ்சும். ஆகவே பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
