Latest Updates
-
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா?
Athisara Guru Peyarchi Palan 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இந்நிலையில் குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
கடகம்
சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் அதிசாரமாக, இரண்டாம் வீடான பணம், கண்கள், வாக்கு ஸ்தானத்திற்கு வருகிறார். குரு தன ஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடக ராசிக்கு குரு யோகாதிபதி. எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் கவலை வேண்டாம் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் குரு பயணிப்பதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். திருமணம் சுபகாரிய புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலைக்காக செல்லும் வெளிநாட்டு பயணங்கள் ஆதாயத்தை தரும்.
குருவின் பொன்னான பார்வை 6, 8, 10 ஆம் வீடுகளின் மீது விழுவதால், உங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும். நோய் நொடிகள் நீங்கும். கடன் தொல்லைகள் குறையும். படித்து முடித்து விட்டு தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இட மாற்றமும் வரும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்க ஜென்ம ராசிக்கு வந்து அதிசாரமாக பயணம் செய்யப்போகிறார். 'ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் உள்ளது. ஜென்ம ராசியில் குரு வரும் பொழுது புது முயற்சிகள் கைகூடும். நீங்கள் தொட்டது துலங்கும். இதுநாள் வரைக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். ஜென்ம ராசிக்குள் குரு வந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல், சரியாக தூக்கமும் இருக்காது. எனவே உணவு உறக்கம் இவற்றில் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். குருவின் பார்வை உங்க ராசிக்கு 5, 7, 9, ஆகிய வீடுகளின் மீது விழுவதால், உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது. உங்களுக்கு உயர்பதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் கை கூடும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
உங்களின் கனவுகள் கைகூடி வரும் காலம் நனவாகி வருகிறது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். உங்க ராசிக்கு 7 ஆம் வீட்டினை குரு பார்ப்பதால் தடைபட்ட திருமணம் தடைகள் நீங்கி இனிதே நடக்கும். ராசிக்கு 9 ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. ஆலய தரிசனம் மன அமைதியை தரும். புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். ஹயக்ரீவரையும் வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் 12 ஆம் வீடான விரையம், மோட்ச ஸ்தானத்திற்கு வருகிறார். வேலைச் சுமையால் உறக்கம் கெடும் என்பதால் கவனம் தேவை. குருவின் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தின் மீது விழுகிறது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் மாற்றம் வரும். பழைய வீட்டினை விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்டக் கூடிய வாய்ப்பு வரும்.
6 ஆம் இடத்தை குரு பார்க்கப் போவதால் வங்கிக் கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். வேலையில் புரமோசன், ஊதிய உயர்வு கிடைக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக மாறும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும். நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். வியாழக்கிழமை நாளில் சிவ ஆலயங்களுக்கு சென்று குரு பகவானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



