Latest Updates
-
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்... -
வெண்டைக்காயை இப்படி புதுமையான சுவையில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற டாப் 5 அரிசி வகைகள் இதாங்க.. எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்?
Aippasi Annabhishekam 2026: ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் சிவ வழிபாட்டுக்கு ஏற்றது. அதுவும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி இன்னமும் சிறப்பு வாய்ந்தது. ஐப்பசி மாதம் ஆன்மீக சிறப்புமிக்க மாதம். இந்த மாதத்தில் எத்தனையோ உற்சவங்கள் நடந்தாலும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவன் கோவில்களில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
பொதுவாக ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமி நாளிலும் அபிஷேக பிரியராக இருக்கக்கூடிய சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு பல பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அப்படி தான் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று சொல்வார்கள். அதற்கான அர்த்தமாக ஒருவர் அதிகமாக சாப்பிடுவதை கிண்டல் செய்வதற்கானதாக நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல.

ஐப்பசி மாத அன்னாபிஷேகம் அன்று சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு சாத்தப்பட்டிருக்கக்கூடிய அன்னத்தை கண் குளிர பார்த்தாலே கோடி புண்ணியம். அதாவது சிவபெருமானின் லிங்க திருமேனியில் இருக்கும் அன்னாபிஷேகத்தின் போது இருக்கும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் ஒரு சிவலிங்கம் இருக்குமாம். எனவே இந்த அன்னாபிஷேகம் செய்த சிவலிங்கத்தை காண்பது பல்லாயிரக்கணக்கான சிவலிங்கங்கள் அந்த ஒரு நாளில் காட்சி கொடுப்பதாக ஒரு நம்பிக்கை. அதைப் பார்த்தால் கண்டிப்பாக சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். அதைத் தான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்று சொல்கிறார்கள்.
இந்த ஆண்டின் அன்னாபிஷேகம் வரக்கூடிய ஐப்பசி பௌர்ணமி அக்டோபர் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதுவும் இந்த பௌர்ணமி திதி அக்டோபர் 25 ஆம் தேதி காலை 11.30-க்கு தொடங்கி மறுநாள் அக்டோபர் 26 ஆம் தேதி காலை 10.16 மணிக்கு முடிவடைகிறது.
சிவலிங்கத்திற்கு நடக்கும் அன்னாபிஷேகம் நேரம் ஒவ்வொரு கோவிலிலும் மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும் மாலை வேளையில் தான் இந்த அபிஷேகம் நடக்கும். அதற்கு முன் சிவபெருமானுக்கு வழக்கமாக செய்யக்கூடிய அபிஷேகங்கள் எப்பவும் போல நடக்கும். அதற்கு பிறகு தான் சிவனுக்கு பச்சரிசி சாதத்தை வடித்து ஆற வைத்து, அதன் பின் லிங்க திருமேனிக்கு முழுவதுமாக பொருத்துவார்கள்.
இந்த ஐப்பசி அன்னாபிஷேக நாளன்று கிரிவலம் செல்ல முடிந்தால், சென்று வாருங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்தின் பிரகாரசத்தை 9 முறை வலம் வாருங்கள். அதுமட்டுமின்றி இந்நாளில் அன்னாபிஷேகத்திற்கு முன் சிவனுக்கு ஒருசில பொருட்களை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது. அதுவும் அன்னாபிஷேகம் செய்வதற்கு தேவையான பச்சரிசியை காலையிலேயே வாங்கி கொடுத்தால் இன்னும் நல்லது.
ஏனெனில் அன்னாபிஷேகத்துக்கு சாதம் வடிக்கும் போது நீங்கள் வாங்கிட்டு போய் கொடுக்கும் அந்த பச்சரிசியையும் சேர்த்து சாதம் வடித்து அதை லிங்க திருமேனியை அலங்கரிப்பார்கள். இது எவ்வளவு பெரிய புண்ணியம். உங்கள் குடும்ப குடும்பமே எதிர்பாராத மாற்றம் அடைவதற்கான வழிவகையை இந்த ஒரு பொருள் ஏற்படுத்தும்.
அடுத்து ஒரு முக்கியமான பொருள் என்றால், அன்னாபிஷேகம் செய்வதற்கு முன் லிங்கத்திற்கு சில அபிஷேகங்களை செய்வார்கள். எனவே பால், தயிர், நெய் போன்ற பால் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அதன் பின் தேன், கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை, நார்த்தங்காய், மாதுளை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி கொடுக்கவும் செய்யலாம்.
அடுத்ததாக, அபிஷேகத்திற்கு பின் செய்யக்கூடிய அலங்காரத்திற்கு தேவையான சந்தனம், விபூதி, மஞ்சள், வாசனை மலர்கள், வில்வ இலைகள் போன்றவற்றையும் வாங்கி உங்கள் கைகளால் கொடுக்கலாம்.
முக்கியமாக இந்த பொருட்கள் அனைத்தையும் நல்ல நேரம் பார்த்து ராகு காலம் எமகண்டம் இல்லாத மாதிரி பார்த்து வாங்கி கொடுங்கள். இந்த ஆண்டு அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், ராகு காலம் மாலை 4:30 மணியில் இருந்து 6 மணி வரை, எமகண்டம் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. இந்த இரண்டு நேரத்தை தவிர்த்து, 10.30 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
