November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்...

November 2026 Lucky Zodiac Signs In Tamil: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த நவம்பர் மாதத்தில் நுழையும் போதே குரு பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதோடு இம்மாதத்தில் செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

November Matha Rasi Palan 2026 List Of Lucky Zodiac Signs

அதில் நவம்பர் முழுவதும் குரு பகவான் சிம்ம ராசியிலும், நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியிலும், புதன் துலாம் ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகளால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இந்த நவம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது நவம்பர் மாத அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் நல்ல மாதமாக இருக்கும். தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இம்மாதத்தில் வாழ்க்கை துணையை சந்திக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது மங்களகரமானதாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! நவம்பர் மாதம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! நவம்பர் மாதமானது உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். செல்வம் பெருகும். நீதிமன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளை வென்று வீழ்த்தும் சக்தி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, October 24, 2026, 15:13 [IST]
Desktop Bottom Promotion