தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க..

Hair Care Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே அடர்த்தியான, நீளமான தலைமுடியைப் பெற வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் முடி உதிர்தல், முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏராளமானோர் சந்திக்கின்றனர்.

Hair Care Tips Top 5 Powerful DIY Castor Oil Remedies for Hair Growth

மேலும் இந்த தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்க பலரும் விலையுயர்ந்த ஹேர் சீரம்கள் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் இயற்கை வழிகளின் மூலமும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், அதன் வளர்ச்சியையும் மேம்படுத்த பலர் விரும்புகின்றனர். அதற்கு விளக்கெண்ணெய் பெரிதும் உதவி புரியும்.

அதுவும் இந்த எண்ணெய் புதிய முடியை நேரடியாகத் தூண்டி முடியை வளரச் செய்வதில்லை. மாறாக, இது ஸ்கால்ப்பை ஈரப்பதத்துடன் வைத்து, முடி உடைவதைக் குறைத்து, தலைமுடி நீளமாக வளர்வதற்குத் தேவையான ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. அதுவும் இந்த விளக்கெண்ணெயை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஹேர் பேக்காக போடும் போது, தலைமுடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். இப்போது முடி வளர்ச்சிக்கு உதவும் சில விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.

1. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வர, நல்ல பலன் கிடைக்கும்.

2. விளக்கெண்ணெய் மற்றும் வெங்காய சாறு ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெ, 2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாறு மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

3. விளக்கெண்ணெய் மற்றும் க்ரீன் டீ ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் ஒரு கப் க்ரீன் டீயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 3-4 துளிகள் புதினா எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தலைமுடிக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், இந்த கலவையால் தலைமுடியை அலசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

4. விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வர, தலைமுடி வலிமையாகும்.

5. விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை ஹேர் மாஸ்க்

* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, October 24, 2026, 20:06 [IST]
Desktop Bottom Promotion