Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு செம சைடிஷா இருக்கும்
Chettinad Muttaikose Kootu Recipe in Tamil: உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸை கொண்டு ஒரு சுவையான செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு செய்யுங்கள்
இந்த செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களானால், இந்த ரெசிபியை நீங்கள் தாராளமாக செய்து கொடுக்கலாம். இது அனைத்து விதமான சாதத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முட்டைக்கோஸ் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - ¾ கப்
முட்டைக்கோஸ் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சிவப்பு மிளகாய் - 2
வெந்தயம் - 2 டீ ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் - ½ டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ½ டீ ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
நெய் - 1 டீ ஸ்பூன்
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 டீ ஸ்பூன்
சீரக விதைகள் - 1 டீ ஸ்பூன்
வரமிளகாய் - 1/2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- பருப்பை இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள்த்தூள் சேர்த்து
குக்கரை மூடி நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
- முட்டைக்கோஸை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் மற்றும் சீரகம்
சேர்த்து தாளிக்கவும்.
- அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து மிதமான தீயில்
வதக்கவும்.
- பின் இதற்கு மட்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து
விடவும்.
- வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் துருவிய தேங்காய்
சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக
அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து அதனுடன் தேவையான
அளவு தண்ணீர், உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி
வரும் வரை வேக வைக்கவும்.
- நன்றாக வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பை அதனுடன்
சேர்க்கவும்.
- பின் அதனுடன் மறைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும்.
- பின் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள்
சேர்த்துக் கொள்ளவும்.
- உங்களுக்கு ஏற்றும் பதத்தில் அடுப்பை அணைத்து எடுத்துக்
கொள்ளவும்.
- மீண்டும் ஒரு வானலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு தேங்காய்
எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும்.
- அதனுடன் உளுந்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக
மாறியதும், நாம் இறக்கி வைத்த கூட்டுடன் சேர்த்து கிளறவும்.
- சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார். இது சாதம் தோசை சப்பாத்தி
பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications