Latest Updates
-
ரத்னா கபே பேமஸ் சாம்பார் ரெசிபி...இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க..எல்லோரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க! -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் சனி பகவானின் ஆசியால் வெற்றியும், பணமும் குவியும்.. -
120 ஆண்டுக்கு பின் உருவாகும் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுதாம்! -
வெந்தயக்கீரையை வாங்குனா.. இப்படி புளிக்குழம்பு செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
முகாலயர்கள் காலத்தில் ஹோலி பண்டிகை எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா? எந்தெந்த அரசர்கள் ஹோலி கொண்டாடினார்கள்? -
இந்த 4 ராசி பெண்களுக்கு ஆண்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜியாம்... அவங்ககிட்ட கத்திட்டே இருப்பார்களாம்... -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்.. -
1 கப் அவலும், தேங்காயும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
1 வருடத்துக்கு பின் சுக்கிரன் மீன ராசி செல்வதால் இந்த 3 ராசிகள் ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம்... உங்க ராசி என்ன?
சிம்ம ராசியில் நிகழும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
Lunar Eclipse 2026: பொதுவாக கிரகணங்கள் என்பவை வானில் அவ்வப்போது நிகழக்கூடிய வானியல் நிகழ்வுகளாகும். ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். அவை 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் ஆகும். ஜோதிடத்தின் படி, கிரகணங்களானது அசுப நிகழ்வாக கருதப்படுகின்றன மற்றும் இவை ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழப் போகிறது. இந்த சந்திர கிரகணத்தின் போது, வானில் ரத்த நிலவு தெரியும். அதாவது நிலவானது சிவப்பு நிறத்தில் தெரியும். இது ஒரு அரிய நிகழ்வாகும்.

இப்படிப்பட்ட சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் தேதி பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:46 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும். எனவே சூதக் காலமும் செல்லும். பொதுவாக சூதக் காலம் சந்திர கிரகணத்திற்கு ஒன்பது மணி நேரத்திற்கு முன்பு தொடங்கிவிடும். எனவே இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலம் மார்ச் 03 ஆம் தே காலை 6:20 மணி முதல் செல்லும்.
சிம்ம ராசியில் நிகழும் சந்திர கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது சிம்ம ராசியில் நிகழும் சந்திர கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது நன்மைகளைத் தரும். குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது மோசமாக இருக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வாழ்வில் பிரச்சனைகளை அதிகரித்துவிடும். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் வேலையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் கையாள்வீர்கள். உங்களின் முயற்சிகள் நல்ல பலனைத் தருவதோடு, பாராட்டையும் பெற்றுத் தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த முடிவுகளையும் இக்காலத்தில் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் இக்காலத்தில் பொறுமையாகவும், விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சந்திர கிரணகத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ திறன்கள் பாராட்டபபடும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உங்களிடம் புதிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படலாம். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். ஆனால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சற்று கண்ணியமாக நடக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால், இக்காலம் அதற்கு சாதகமாக இருக்கும். நம்பிக்கையுடன் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் வேலையில் சவால்களை சந்திக்க நேரிடும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தோல்வியால் மனம் தளராமல் தொடர்ச்சியாக முயற்சி செய்தால், படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலன்களைத் தரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முக்கியமாக வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் காண்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். போட்டிகள் அதிகரிக்கும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், பட்ஜெட் பாதிக்கப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க வேண்டும். புத்திசாலித்தனமாக யோசித்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும். குடும்ப சூழல் சிறப்பாக இருக்க குடும்பத்தினருடன் நல்ல தகவல் தொடர்பை கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சந்திர கிரகணத்தால் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். எதையும் ஒழுங்காக செய்ய முயற்சி செய்யுங்கள். இதனால் சூழ்நிலைகள் சாதகமாக மாறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications















