Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க!
சிம்ம ராசியில் நடக்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது மற்றும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் தேதி நிகழவுள்ளது. முக்கியமாக இந்த சந்திர கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது.
இப்படி நிகழும் சந்திர கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் இந்த சந்திர கிரகணம் சிம்ம ராசியில் நிகழ்வதால் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் 2026 தேதி மற்றும் நேரம்
2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் தேதி நிகழ்கிறது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணமானது மாலை 4:34 மணிக்கு தொடங்கி, மாலை 6:47 மணிக்கு முடியும். முக்கியமாக இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் சிறிது நேரம் மட்டுமே காண முடியும்.
ஏனெனில் கிரகண நாளில் இந்தியாவில் சந்திர உதயம் மாலை 6:22 மணியளவில் எதிர்பார்க்கப்படுகிறது. கிரகணம் மாலை 6:47 மணிக்கு முடிவடைவதால், பார்வையாளர்கள் இந்த நிகழ்வைக் காண சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே காண முடியும்.
இப்படிப்பட்ட சந்திர கிரகணம் சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழ்வதால், எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தின் படி செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்களாவர். இதனால் இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாயப்புக்களைப் பெறுவார்கள்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம்.
சிம்மம்
ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்வதால் இருந்தால் , புத்திசாலித்தனமாக யோசித்து பின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபமே உறவுகளை சேதப்படுத்தும்.
தனுசு
2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications