Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Moon Venus Make Kalathmak Rajyog 2026: ஜோதிடத்தின் அசுரர்களின் குரு மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மார்ச் 02 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார்.
இந்த மீன ராசியானது சுக்கிரனின் உச்ச ராசியாகும். இந்த ராசியில் சுக்கிரன் இரட்டிப்பு வலிமையுடன், ஏராளமான நற்பலன்களை அள்ளித் தருவார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் மார்ச் 16 ஆம் தேதி சந்திரன் குரு பகவானின் ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி மீன ராசியில் சந்திரன் நுழையும் போது, சுக்கிரனுடன் சேர்ந்து காலாத்மக் என்னும் ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
இருந்தாலும் 4 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்துடன், நிதி நிலையில் வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது சுக்கிரன் மற்றும் சந்திரனால் உருவாகும் காலாத்மக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் காலாத்மக் ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தினால் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இசை, கலை, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் காலாத்மக் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மார்கெட்டிங், ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும் வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் காலாத்மக் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். ஃபேஷன் தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் காலாத்மக் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
