Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க...
Holi 2026 Skin Care Tips In Tamil: வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ஹோலி பண்டிகை. இது வண்ணங்களின் பண்டிகையாகும். இந்த ஹோலி பண்டிகையில் மக்கள் கலர் பொடிகளைத் தூவி கொண்டாடுவார்கள்.
நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கலர் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினீர்களா? இதனால் உங்கள் முகத்தில் வண்ணங்கள் படிந்து நீங்காமல் உள்ளதா? சருமத்தில் படிந்துள்ள வண்ணங்களை எளிய வழியில் நீக்க வேண்டுமா? அப்படியானால் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள்.

இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தில் படிந்துள்ள வண்ணங்களின் கறைகளை நீக்குவதோடு, சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
1. கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
2. கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலைத் தடுப்பதோடு, வண்ண கறைகளையும் நீக்க உதவும்.
3. முல்தானி மெட்டி மற்றும் பால் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி ஓரளவு காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கறைகளைப் போக்கி, முகத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.
4. எலுமிச்சை மற்றும் தேன் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, விடாப்பிடியான கறைகளையும் போக்க உதவும்.
5. பப்பாளி மற்றும் தேன் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி பழத் துண்டுகளை எடுத்து மசித்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருவதோடு, விடாப்பிடியாக கறைகளையும் போக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
