Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
உங்க முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த கொரியன் ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் பொலிவிழந்து, கருப்பாக காணப்படுகிறதா? உங்கள் முகத்தின் நிறத்தை அதிகரித்து, கண்ணாடி போன்று பளிச்சென்று பிரகாசமான சருமத்தைப் பெற வேண்டுமா? அதுவும் அழகு நிலையங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழிக்காமல், வீட்டிலேயே உங்கள் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா?
அப்படியானால் சமீப காலமாக மக்களிடையே பிரபலமாக உள்ள கொரியன் ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அந்த கொரியல் ஃபேஸ் மாஸ்க்குகளை போடலாம். இந்த கொரியன் ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவையும் தரும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்கும் சில கொரியன் ஃபேஸ் மாஸ்க்குகளைக் காண்போம்.

1. அரிசி தண்ணி ஃபேஸ் மாஸ்க்
* அரிசி தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த அரிசி தண்ணீரை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த எளிய ஃபேஸ் மாஸ்க் சருமத்தை பிரகாசமாக்குவதோடு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கும்.
2. மட்சா க்ரீன் டீ மாஸ்க்
* மட்சா க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இந்த மட்சா க்ரீன் டீ பவுடரை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து க்ரீம் போன்று நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. யூஜா ஃபேஸ் மாஸ்க்
* யூஜா என்பது ஒரு சிட்ரஸ் பழம். இது கொரியன் சரும பராமரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த யூஜா பழச்சாற்றுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் பொலிவிழந்த சருமத்தை பிரகாசமாக்குவதோடு, நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்.
4. முட்டை வெள்ளைக்கரு ஃபேஸ் மாஸ்க்
* முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள பண்புகள், சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்யும். அப்படிப்பட்ட முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து, நன்கு நுரைக்க அடித்து, சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்துளைகளை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கும்.
5. இட்லி மாவு ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் இட்லி மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, நல்ல பொலிவைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications