Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
முகாலயர்கள் காலத்தில் ஹோலி பண்டிகை எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா? எந்தெந்த அரசர்கள் ஹோலி கொண்டாடினார்கள்?
இந்தியாவின் மிகவும் வண்ணமயமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஹோலி பண்டிகை வந்துவிட்டது. இந்தியர்கள் அனைவரும் ஹோலி பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இப்போது ஹோலி மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டாலும் கடந்த காலங்களில் இந்த பண்டிகை எப்படி கொண்டாடப்பட்டது. குறிப்பாக முகலாயர்கள் காலத்தில் எப்படி கொண்டாடப்பட்டிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
இந்தியாவின் பெரும் நிலப்பரப்பு முகலாயர்களால் கிட்டதட்ட 300 ஆண்டுகள் முகலாயர்களால் ஆளப்பட்டது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் பல மாற்றங்களும், சீர்திருத்தங்களும் செய்யப்பட்டது. அதேசமயம் இந்தியாவின் பண்டிகைகளும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. இந்த பதிவில் முகலாயர்கள் காலத்தில் ஹோலி எப்படி கொண்டாடப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

முகலாயர்கள் காலத்தில் ஹோலி
முகலாயர் ஆட்சிக் காலத்தில் வட இந்தியாவில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, அரண்மனையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஹோலி இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது என்ற மூடநம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், முகலாயர்களாலும், முஸ்லீம்களாலும் இந்த பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
அக்பரும் அவரது வாரிசுகளும் ஹோலியை எவ்வாறு கொண்டாடினர்?
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குந கே.கே.முகமது கூறுகையில்," ஆக்ரா கோட்டை மற்றும் செங்கோட்டையில் ஈத் பண்டிகை போலவே ஹோலி கொண்டாடப்பட்டது. "இது 'ஈத்-இ-குலாபி' அல்லது 'ஆப்-இ-பாஷி (வண்ணமயமான பூக்களின் மழை)' போல கொண்டாடப்பட்டது," என்று அவர் கூறினார்.
முகலாய பேரரசர் அக்பரைப் பற்றி அபுல் ஃபசல் எழுதிய Ain-i-Akbariin புத்தகத்தில், அக்பர் ஆண்டு முழுவதும் வெவ்வேறு அளவுகளில் அழகான நீர் துப்பாக்கிகளை சேகரித்து, ஹோலி பண்டிகையைக் கொண்டாட மிகவும் உற்சாகமாக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் "பேரரசர் அக்பர் ஆக்ராவில் உள்ள தனது கோட்டையிலிருந்து வெளியே வந்து சாதாரண மக்களுடன் கொண்டாடும் அரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.
பின்னர் Tuzuk-e-Jahangiri புத்தகத்தில் பேரரசர் ஜஹாங்கிரின் ஹோலி மீதான அன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஹோலியை தீவிரமாக விளையாடியதாகவும், 'மெஹ்ஃபில்-இ-ஹோலி' என்று அழைக்கப்படும் கூட்டங்களை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கோவர்தன் மற்றும் ராசிக் போன்ற பல கலைஞர்களால் ஜஹாங்கிர் தனது மனைவி நூர் ஜஹானுடன் ஹோலி விளையாடும் ஓவியங்கள் உள்ளன.
கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபர், ஒவ்வொரு ஆண்டும் ஹோலியின் போது தனது இந்து அமைச்சர்கள் தனது நெற்றியில் குலால் பூச அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
செங்கோட்டையில் ஹோலி கொண்டாடப்பட்டது
ஆக்ராவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட எழுதப்பட்ட தவாரிக்-ஏ-ஆக்ரா என்ற புத்தகத்தின் ஆசிரியரான வரலாற்றாசிரியர் ராஜ் கிஷோர் ராஜே, "அக்பர், ஜஹாங்கிர் மற்றும் ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் ஆக்ரா கோட்டையில் ஹோலி கொண்டாடப்பட்டது. இந்த வழக்கம் ஔரங்கசீப் ஆலம்கீரைத் தவிர, அவர்களின் வாரிசுகளால் பின்பற்றப்பட்டு வந்தது.
ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, அந்தக் காலக் கவிஞர்கள் மற்றும் துறவிகளும் ஹோலி பற்றி விரிவாகப் பேசினர். 13 ஆம் நூற்றாண்டில், பிரபல கவிஞர் அமீர் குஸ்ராவ் இந்த பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பல வசனங்களை எழுதினார். 'கெலுங்கி ஹோலி, காஜா கர் ஆயே, தன் தன் பாக் ஹமாரே சஜ்னி, காஜா ஆயே ஆங்கன் மேரே' (காஜா வீட்டிற்கு வந்ததால் நான் ஹோலி விளையாடுவேன், ஓ நண்பரே, காஜா என் முற்றத்திற்கு வந்ததால், என் அதிர்ஷ்டம் ஆசீர்வதிக்கப்பட்டது) என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
