Latest Updates
-
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
இந்த 4 ராசி பெண்களுக்கு ஆண்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜியாம்... அவங்ககிட்ட கத்திட்டே இருப்பார்களாம்...
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை அவர்களின் ராசியின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக பெண்கள் அன்பானவர்களாகவும், மென்மையானவர்களாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அனைத்து பெண்களும் அப்படி இருப்பதில்லை.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்றவர்களிடம் மிகவும் கடுமையாக குறிப்பாக ஆண்களிடம் மிகவும் கடுமையாகவும், இரக்கமின்றியும் நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொதுவாக ஆண்களை கடுமையாக விமர்சிப்பவர்களாகவும், ஆண்களிடம் பொறுமையற்றவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் போர் மற்றும் ஆற்றலின் கிரகமான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். இந்த உக்கிரமான ராசி பெண்கள் அவர்களின் துணிச்சல் மற்றும் மன உறுதிக்கு பெயர் பெற்றவர்கள். மேஷ ராசிப் பெண்கள் இயற்கையாகவே சுதந்திரமானவர்கள்மற்றும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேச ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.
ஆண்களுடன் பழகும்போது அவர்கள் சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வார்கள், ஏனெனில் அவர்கள் மரியாதை மற்றும் நேர்மையை அவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். மேஷ ராசிப் பெண்கள் பலவீனம் அல்லது தயக்கத்தை விரும்புவதில்லை. எனவே ஆண்களிடம் அத்தகைய குணங்களைக் காணும் போது அதை கடுமையாக விமர்சிக்க அவர்கள் தயங்குவதில்லை.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி பெண்கள் அவர்களின் ஒழுக்கம் மற்றும் எதார்த்தமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் வாழ்க்கையை சீரியஸாக வாழ்கிறார்கள், ஆண்கள் உட்பட தங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள். மகர ராசிப் பெண்கள் கண்டிப்பானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள், பெரும்பாலும் முட்டாள்தனம் அல்லது அலட்சியத்திற்கு இடமளிக்க மாட்டார்கள்.
அவர்களின் கண்டிப்பு பெரும்பாலும் அவர்களின் அதிக எதிர்பார்ப்பு மற்றும் வலுவான பொறுப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. அவர்கள் ஆண்களை சிறந்தவர்களாக இருக்க தூண்டுவார்கள், ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாதபோது அவர்கள் இரக்கமற்றவர்களாக மாறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் புளூட்டோ மற்றும் செவ்வாய் கிரகங்களால் ஆளப்படுகிறார்கள், இந்த இரண்டு கிரகங்களும் மாற்றம் மற்றும் ஆர்வத்தைக் குறிக்கின்றன. விருச்சிக ராசி பெண்கள் தங்கள் தீவிரம் மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள். ஒரு விருச்சிக ராசி பெண் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொண்டால், அது பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் சந்தேகத்திலிருந்து உருவாகிறது.
அவர்கள் துரோகம் அல்லது நேர்மையின்மையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருக்கலாம். இந்த கடுமையான குணத்தை அவர்கள் தங்களின் கேடயமாக பயன்படுத்துகின்றனர்.
தனுசு
தனுசு ராசிப் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் நேர்மை மற்றும் வெளிப்படையான தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் நேரடியான அணுகுமுறை என்பது நேர்மையின் வெளிப்பாடாக இருந்தாலும், சில சமயங்களில் மென்மையான பேச்சை விரும்பும் ஆண்களுக்கு அவர்களின் அணுகுமுறை மிகவும் கடுமையானதாக இருக்கலாம்.
தனுசு ராசிப் பெண்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்கள் மற்றும் மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் தங்களை கட்டுப்படுத்துவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரைவாகச் சிந்திக்கக்கூடியவர்கள் மற்றும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள், எனவே அவர்களின் பேச்சுக்கள் எப்போதும் வெளிப்படையானதாக இருக்கும், அதனால் யார் காயப்படுவதையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












