Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
Lunar Eclipse 2026: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் தேதி நிகழ்கிறது. இது ஒரு முழுமையான சந்திர கிரகணமாகும். சந்திர கிரகணம் என்பது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். ஜோதிடத்தின் படி, இந்த சந்திர கிரகணம் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் சந்திர கிரகணத்தின் தாக்கம், பூமியிலும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
புராணங்களின் படி, சந்திர கிரகணம் தொடங்குவதற்கு சுமார் 9 மணிநேரத்திற்கு முன் சூதக் காலம் தொடங்குகிறது. அந்த வகையில் ஏற்கனவே காலை 6.20 மணிக்கு சூதகம் காலம் தொடங்கிவிட்டது. இந்த சூதக் காலம் தொடங்கியதுமே ஒருசில காரியங்களை செய்ய தடைசெய்யப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும்.

அதுவும் சிம்ம ராசியில் நிகழும் இந்த சந்திர கிரகணத்தின் போது நிலாவானது சிவப்பு நிறத்தில் காணப்படும். சரி, இப்போது சந்திர கிரகணம் எப்படி உருவாகிறது மற்றும் சந்திர கிரகணத்தின் போது நிலா எதனால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது என்பது குறித்தும், இந்த கிரகணத்தை பார்ப்பது பாதுகாப்பானதாக என்பது பற்றியும் காண்போம்.
சந்திர கிரகணம் எப்படி உருவாகிறது?
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி செல்லும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது மற்றும் சூரிய ஒளி சந்திரன் மீது விழாமல் தடுத்து, சந்திரனை கருப்பாக காட்டுகிறது.
2026 முதல் சந்திர கிரகணம் நேரம்
இந்திய நேரப்படி, சந்திர கிரகணமானது பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. இதில் சந்திரன் முழு கிரகணமானது மாலை 4.34 மணிக்கு இருக்கும். கிரகணத்தின் நடுப்பகுதி மாலை 5.33 மணிக்கு இருக்கும். மொத்தத்தில் ஆண்டின் முதல் சந்திர கிரகணமானது சுமார் 59 நிமிடங்கள் நீடித்திருக்கும்.
சந்திர கிரகணத்தின் போது சந்திரன் சிவப்பு நிறமாக ஏன் தோன்றுகிறது?
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, பூமியின் நிழலில் சந்திரன் இருக்கும் போது, சூரிய ஒளியானது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சென்று, சிதறடிக்கப்படும் போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீள சூரிய ஒளி நேரடியாக சந்திரனை அடைந்து, சந்திரனை சிவப்பு நிறத்தில் காட்டுகிறது. இந்த செயல்முறையானது ரேலீ சிதறல் என்று அழைக்கப்படுகிறது.
எப்படி சூரியன் அஸ்தமனமாகும் போது, சிவப்பு நிறத்தில் தெரிகிறதோ, பூமியின் வளிமண்டலம் சந்திர கிரகணத்தின் போது சூரிய ஒளியை வடிகட்டும் போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கதிர்கள் சந்திரனை அடைந்து, சந்திரனை சிவப்பு நிறத்தை வெளிக்காட்டுகிறது. இதனால் தான் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் இரத்த நிலா போன்று காட்சியளிக்கிறது.
சந்திர கிரகணத்தின் போது மற்றும் கிரகணம் முடிந்த பின் என்ன செய்ய வேண்டும்?
சாஸ்திரங்களின் படி, சூதக் காலம் தொடங்கியதும், வீட்டின் பூஜை அறையை சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. மேலும் தானம் செய்வதும் நல்லது. அதுவும் கிரகணம் முடிந்த மறுநாள் அரிசி, பால், நெய், வெள்ளை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வது, சந்திர தோஷங்களை போக்கி, முன்னோர்களின் ஆசியைப் பெற உதவுவதாக நம்பப்படுகிறது.
அதோடு கிரகணத்தின் போது சிவபெருமானின் மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும், "ஓம் ஷ்ராம் ஸ்ரீம் ஷ்ரம் சஹ் சந்திரமாசே நமஹ" என்ற சந்திர மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அதோடு, இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தையும் பாராயணம் செய்யலாம். முக்கியமாக கிரகணம் முடிந்த பின் குளிக்க வேண்டும். இது உடலில் இருந்தும் சுற்றுச்சூழலில் இருந்தும் எதிர்மறையை நீக்குகிறது. குளித்த பின் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
சிவப்பு நிலாவை பார்க்கலாமா?
கிரகணங்களில் சூரிய கிரகணத்தை தான் வெறும் கண்ணில் பார்க்கக்கூடாது. சந்திர கிரகணத்தின் போது சூரிய கதிர்கள் நேரடியாக கண்களில் படாததால் வெறும் கண்ணில் பார்க்கலாம். கண்களுக்கு எந்த ஒரு கண்ணாடியும் அணிய வேண்டிய அவசியம் இல்லை. திறந்த வானத்தின் கீழ் நின்று பார்க்கலாம். குழந்தைகள் கூட சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
