For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் உணவுகள் எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருக்க வேண்டுமானால் அதில் உணவுகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதேசமயம் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாவதற்கும் நாம் உண்ணும் சில உணவுகள் தான் என்பதையும் மறக்காதீர்.

|

தற்போதைய காலக்கட்டத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையுடன் இருக்க வேண்டுமானால் அதில் உணவுகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாவதற்கும் நாம் உண்ணும் சில உணவுகள் தான் என்பதையும் மற்ற வேண்டாம்.

Worst Foods To Eat For Your Immune System

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருந்தார்கள் என்றால், அதற்கு அவர்களது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான் காரணம். தற்போதைய நவீன காலத்தில் பலவகையான வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளின் சுவை நமது நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் மிகவும் சுவையுடன் இருக்கலாம். ஆனால் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஏனெனில் அந்த உணவுகளில் சுவைக்காக சில செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இவை நமது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன.

MOST READ: திடீர் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தைத் தடுக்கணுமா? அப்ப தினமும் இந்த சிரப்பை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க..

இப்போது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் மோசமான உணவுகள் எவையென்பதைக் காண்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட்

சாக்லேட்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் சாக்லேட். ஆனால் நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், சர்க்கரை முழுமையாக நிறைந்த சாக்லேட்டுகளைத் தவிர்ப்பது தான் நல்லது. ஏனெனில் இவற்றில் உள்ள சர்க்கரை உடலினுள் அழற்சி/காயங்களை அதிகரிக்கும். ஒருவரது உடலினுள் காயங்கள் அதிகளவில் இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சோடா

சோடா

சோடா மற்றும் பிற சர்க்கரையூட்டப்பட்ட பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிளவில் நிறைந்துள்ளன மற்றும் இவற்றில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. சோடா பானங்களை அதிகம் உட்கொண்டால், அது உடல் எடையை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஒருவரது உடல் எடை அவரது உயரத்தை விட அதிகமாக இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கி, பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு வழிவகுத்துவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

வோட்கா, பீர் மற்றும் ஒயின் போன்ற மது பானங்களை மிதமான அளவில் உட்கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்துகிறாரோ, அவரது நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, பல ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும்.

எனர்ஜி பானங்கள்

எனர்ஜி பானங்கள்

உடலின் ஆற்றலை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றவை வழங்கும் பல்வேறு எனர்ஜி பானங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதல்ல. அதோடு இரவு தூக்கத்தையும் இது கெடுக்கிறது. பொதுவாக ஒருவருக்கு போதுமான இரவு தூக்கம் கிடைக்காவிட்டால், அவரது நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்படுகிறது. மேலும் எனர்ஜி பானங்களில் காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ளது. அதிகப்படியான காப்ஃபைன் உடலில் காயங்கள்/அழற்சியை அதிகரிக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளான பிரெஞ்சு ப்ரைஸ், சிக்கன் விங்ஸ் போன்றவை சுவையானதாக இருக்கலாம். ஆனால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் என்று பார்க்கும் போது, இந்த வகையான உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்தும். 2016 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கும் குடல் நுண்ணுயிரியை எதிர்மறையாக பாதிப்பது தெரிய வந்தது.

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்ப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் பர்கர், ஃப்ரைஸ், ஷேக்குகள் மற்றும் பிற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள், சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், சோடியம் மற்றும் சர்க்கரை போன்றவை அதிகம் உள்ளது. இவை அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துபவைகள். அதோடு இந்த வகை உணவுகள் டைப்-2 சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

சோடியம்

சோடியம்

சோடியத்தை முற்றிலும் தவிர்ப்பது என்பது கடினம். ஏனெனில் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் சோடியம் என்னும் உப்பை சேர்ப்போம். ஆனால் பதப்படுத்தப்பட்ட மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள், கேன் சூப்புகள் மற்றும் காய்கறிகள், சீஸ், பிட்சா, சில வகையான ஸ்நாக்ஸ் போன்றவற்றில் உப்பு சற்று அதிகம் உள்ளது. சோடியத்தை உணவில் அதிகம் சேர்த்தால், அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாட்டை அடக்கும். எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம், சுவையானதாக இருக்கலாம். ஆனால் இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக நிறைந்துள்ளது. இது உடலினுள் அழற்சி/காயங்களை ஏற்படுத்தி, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மோசமாக பாதித்து, பலவீனமாக்கும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு சிப்ஸ், கார்ன் சிப்ஸ் மற்றும் பிற சிப்ஸ்களில் உப்பு அதிகம் சேர்த்திருப்பதோடு, எண்ணெயில் பொரிக்கப்படுபவை. நீங்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க முயற்சிப்பவராயின், இந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது தான் நல்லது.

குக்கீஸ், கேக்

குக்கீஸ், கேக்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க நினைக்கும் போது, இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவது நல்லதல்ல. முன்பு கூறியது போல், கொழுப்பு, கலோரிகள், சர்க்கரை போன்றவை அதிகம் நிறைந்த உணவுகள் உடலினுள் அழற்சி மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அளவுக்கு அதிகமாக பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை உண்பது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மூன்று மடங்கு அதிகமாக சேதத்தை உண்டாக்கும். ஆகவே கடைகளில் விற்கப்படும் கேக், குக்கீஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst Foods To Eat For Your Immune System

Here we listed some worst foods to eat for your immune system. Read on...
Desktop Bottom Promotion