Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
Saturn Nakshatra Transit On 21 March 2026: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகளும், ஒரு நட்சத்திரத்தில் 3-4 மாதங்கள் வரை பயணிப்பார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் மார்ச் 21 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் தொழில், வியாபாரம், நிதி நிலைமை, அதிர்ஷ்டம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சனி பகவான் நட்சத்திரத்தை மாற்றுவதால் மார்ச் 21 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணத்தில் உள்ள தடைகள் நீங்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்தால், அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும். எண்ணங்கள் நேர்மறையாக இருக்கும். சனி பகவானின் ஆசியால் வாழ்வில் இருந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவைப் பெறக்கூடும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். இக்காலத்தில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில சிறப்பான மாற்றங்களைக் காண்பார்கள். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
புதிதாக தொழிலை தொடங்கியிருந்தால், இக்காலத்தில் அதில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சனி பகவானின் ஆசியால் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். அலுவலகத்தில் புதிய திட்டத்தில் பணிபுரிந்தால், அதன் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



