மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...

Mercury Transit In Pisces On 11 April 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.

இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியான புதன் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் தொழிலில் சிறந்து விளங்குவார், பேச்சாற்றல் மிக்கவராக இருப்பார் மற்றும் மிகவும் புத்திசாலியாக இருப்பார். இப்படிப்பட்ட புதன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளார்.

Mercury Transit In Pisces On 11 April 2026 These Zodiac Signs Will See Growth In Career

இந்நிலையில் இந்த புதன் ஏப்ரல் 11 ஆம் தேதி குரு பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியான உள்ளுணர்வு, ஆன்மீகம், கற்பனை ஆகியவற்றின் ராசியாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட மீன ராசிக்கு புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், பல புதிய வாய்ப்புக்களுடன், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். இப்போது மீன ராசிக்கு செல்லும் புதனால் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர் என்பதைக் காண்போம்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழில் வாழ்க்கையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆயினும் கோபத்தை சற்று கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும். எந்த ஒரு முக்கியமான திட்டதிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பேச்சாற்றல் மேம்படும். எதையும் பகுத்தறிந்து செய்யும் தியன் மேம்படும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்களால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கலாம். முதலீடுகளை செய்யும் போது புத்திசாலித்தனமாக நன்கு யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இப்பெயர்ச்சியால் மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, March 17, 2026, 16:39 [IST]
Desktop Bottom Promotion