Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
Mars Transit In Pisces 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் துணிச்சல்மிக்கவராக, எதையும் துணிந்து செய்யக்கூடியவராக, தைரியசாலியாக இருப்பார். அதுவே பலவீனமான நிலையில் இருந்தால், ஒன்றை செய்ய அதிக தயக்கம் கொள்வார். தற்போது செவ்வாய் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 02 ஆம் தேதி செவ்வாய் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசிக்கு செவ்வாய் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் குருவும், செவ்வாயும் நட்பு கிரகங்களாவர். ஆகவே இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிக நற்பலன்களை தருவதாக கருதப்படுகிறது.
முக்கியமாக இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைவதால், ஒருவர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. இப்போது 18 மாதங்கள் கழித்து மீன ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மேலும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதால், இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள்.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். புதிய முதலீடுகளில் இருந்தும் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். ஆயினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால் அல்லது வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்புகள் இக்காலத்தில் தேடி வரும். தடைபட்டு வந்த பல முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். குறிப்பாக கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் நிச்சயம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் நிதி மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறலாம். ஆனால் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

