Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
Sun Transit In Pisces 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குரு பகவானின் மீன ராசிக்கு சூரியன் சுமார் 12 மாதம் கழித்து நுழையவுள்ளார். ஏற்கனவே இந்த ராசியில் பல கிரகங்கள் உள்ளன.

இந்நிலையில் சூரியனும் மீன ராசியில் செல்வது சற்று சிறப்பானது. இதனால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது மார்ச் 15 ஆம் தேதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலை செய்து வந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் நற்பெயர் பாழாகும் வாய்ப்புள்ளது. எனவே அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மேலும் தேவையற்ற செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். சேமித்து வைத்த பணம் கரையும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மார்ச் 15 முதல் சோதனை காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும். தன்னம்பிக்கை குறையும். பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற கோபத்தால் உறவுகளில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகள், தலைவலி, உடல் சூடு போன்றவற்றால் சிரமப்படக்கூடும். அரசு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
