Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Mahalaxmi Rajyog In Aquarius 2026: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகம் தான் சந்திரன். இந்த சந்திரன் மனதின் காரணியாக கருதப்படுகிறார். கடக ராசியின் அதிபதியான சந்திரன், ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் சந்திரன் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் அடிக்கடி ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சந்திரன் மார்ச் 16 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பயணித்து வருகிறார்.

இதனால் கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சுப யோகத்தால் மகாலட்சுமியின் ஆசியால் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது கும்ப ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யர் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தாலோ அல்லது வேலையை தேடிக் கொண்டிருந்தாலோ, அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சந்திரனின் சேர்க்கையல் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும்.
குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆராய்ச்சி, மருத்துவம், ஐடி துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

