Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
Mercury Rise In Aquarius 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். மேலும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
தற்போது புதன் கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த அஸ்தமன நிலையில் புதன் பலவீனமாக இருப்பதால், புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் ஏற்பட்டிருக்கும்.

இந்நிலையில் புதன் மார்ச் 14 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். இப்படி புதன் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் புதன் உதயமாவதால் தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெறவுள்ளனர்.
அதுவும் புதன் உதயமாவதால் ஒருவரது சிந்தனை, பகுப்பாய்வு திறன்கள் மற்றும் தகவல்தொடர்பு திறன்கள் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். எழுத்து, ஐடி, கல்வி தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இப்போது கும்ப ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். மொத்தத்தில் தொழில் மந்தம் நீங்கி, நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். செல்வம் குவியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை மேம்படும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
