Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
புதன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Mercury Retrograde In Aquarius 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் தொழிலில் காணப்படும்.
அந்த வகையில் தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் பிப்ரவரி 26 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதுவும் இந்த நிலையில் புதன் மார்ச் 21 ஆம் தேதி வரை இருப்பார்.

இப்படி புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது புதன் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய சவால்களை சந்திப்பார்கள். பணியிடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வீண் பழி சுமத்தப்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். இக்காலத்தில் சிந்திக்காமல் எந்த பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம். ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக சவாலானதாக இருக்கும். இருப்பினும் பொறுமையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றிகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் இரண்டாவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது வேலையிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். தொண்டை மற்றும் காது பிரச்சினைகளால் அவதிப்படக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செலவுகளும், இழப்புகளும் அதிகம் ஏற்படும். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியான முயற்சி இல்லாமல் எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் ஏமாற்றமடையக்கூடும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

