Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
கும்பத்தில் அஸ்தமனமாகும் புதன்: பிப்ரவரி இறுதியில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mercury Combust In Aquarius 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய காலத்தில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். அதுவும் இவர் ராசியை மாற்றுவதைத் தவிர, அஸ்தமனமாவது, உதயமாவது, வக்ரமாவது என்று பலவாறு புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் புதன் கும்ப ராசியில் இரண்டு முறை அஸ்தமித்து, இரண்டு முறை உதயமாவார். அதில் ஏற்கனவே பிப்ரவரி 10 ஆம் தேதி புதன் கும்பத்தில் உதயமானார். இந்நிலையில் பிப்ரவரி 28 ஆம் தேதி அஸ்தமித்து, பின் மார்ச் 13 ஆம் தேதி உதயமாவார். இப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம், ஒருவரது பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் போன்றவற்றில் காணப்படும்.

பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கும். ஆனால் இம்முறை புதன் கும்பத்தில் அஸ்தமனமாவது நல்ல நேர்மறையான பலன்களைத் தரப் போகிறது. அதுவும் சில ராசிக்காரர்கள் புதன் அஸ்தமனமாவதால் நல்ல அதிர்ஷ்டத்தையும், நிதி நிலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது புதன் அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன்கள் மேம்படும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தகவல் தொடர்பு திறன்கள் சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், மார்ச் 13-க்கு பின் செய்வது இன்னும் நல்ல பலனைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். தொழிலதிபர்கள் புதனின் அருளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் மாற்றங்களைக் காணக்கூடும். படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். புதுமண தம்பதிகள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். மேலும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



