Latest Updates
-
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்..
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
Saturn Transit In Revati Nakshatra On 20 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியிலும், உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் சனி பகவான் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். சனி பகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால், இதன் விளைவு 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வரும்.
முக்கியமாக இந்த சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அக்டோபர் 09 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல சவால்களை, பிரச்சனைகளை சந்திக்கவுள்ளனர். இப்போது ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்க இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரம் இழப்புகளுக்கு வழிவகுக்கும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணிக்காதீர்கள்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் பண விஷயங்களில் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு திட்டங்களிலும் அவசரப்பட்டு முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எந்த ஒரு அவசர முடிவுகளையும் இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் சிறு விஷயங்கள் கூட பெரிய பிரச்சனையாக வெடிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
கடகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக யோசிப்பதை தவிர்த்து, அமைதியான மனநிலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் புதிதாக ஒரு வேலையை செய்ய நினைத்திருந்தால், திட்டமிடாமல் அதை செய்ய வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் எதையும் மறைக்காமல், மனம்விட்டு தெளிவாக பேசுங்கள். ஏனெனில் விஷயங்களை மறைப்பது தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துவிடும். முக்கியமாக இக்காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது ஆரோக்கியத்தையும், உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



