சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்

சூரிய கிரகணம் வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக் கருதப்படுகிறது. இந்து நாட்காட்டியில் மிக முக்கியமான அமாவாசை தினங்களில் ஒன்றான ஆடி மாத அமாவாசை, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒரு அபூர்வமான முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இது 2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகும். இந்த கிரகண நாளில் சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்து முழு கிரகணத்தை உருவாக்குவதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Solar Eclipse on August 12 These 3 Zodiac Signs Will Get Luck and Prosperity

இந்தக் கிரகணம் கடக ராசியில் நிகழும் என்று கூறப்படுகிறது. அப்போது சூரியன், சந்திரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்களும் அதே ராசியில் அமைந்து 'சதுர்கிரஹி யோகம்' எனும் சக்திவாய்ந்த கிரக அமைப்பை உருவாக்குகின்றன. இந்தக் கிரகணம் இந்தியாவிலிருந்து தெரியாது என்றாலும், இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நேர்மறையான பலன்களை அளிக்கும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் பல நன்மைகளை அளிக்கப்போகிறது. கடக ராசியில் உருவாகும் சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடும், மேலும் அதிக நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் வீடு தொடர்பான பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் போது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறலாம்.

தொழில்ரீதியாக, இந்த பெயர்ச்சியின் போது அவர்கள் வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வேலை தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் உருவாகும், மேலும் உங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நீங்கள் மகிழ்ச்சியடையக்கூடும் என்பதால், நிறைவாக உணர்வீர்கள். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறலாம்.

சிம்மம்

இந்த சதுர்கிரக யோகமும், சூரிய கிரகணமும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. சிம்ம ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.

திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறப்போகிறார்கள். அவர்களின் முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கு சிறந்த வெகுமதி கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் இயல்பிலேயே பண விஷயத்தில் மிகவும் சாதுர்யனமானவர்கள், தங்கள் செல்வத்தை எவ்வாறு பெருக்குவது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் இந்த யோகத்தால் லாபகரமான புதிய முயற்சிகள் அல்லது முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.

இந்த சதுர்கிரக யோகத்தால் அவர்கள் வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான தொடக்கத்தைப் பெற முடியும். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்ற வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கைத்துணைக்கு நீண்ட காலமாக கொடுக்க நினைத்த ஆடம்பர பரிசை இந்த மாதம் கொடுக்கலாம். இது அவர்களின் இலட்சியங்கள் நிறைவேறும் காலமாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, August 3, 2026, 23:17 [IST]
Desktop Bottom Promotion