Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Tri Ekadash Yog Will Form 6 Times In April 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் சேர்க்கைகளால் பல்வேறு யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஜோதிடத்தில் உள்ள ஒரு சுப யோகம் தான் திரி ஏகாதச யோகம். இந்த யோகமானது ஒருவரது தொழிலிலும், நிதி நிலையிலும் நல்ல வளர்ச்சியை கொண்டு வரும்.
அதுவும் இந்த மங்களகரமான யோகம் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் இருக்கும் போது உருவாகும். இந்த யோகம் உருவானால் அது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும், எதிர்பாராத நிதி நன்மைகளையும் கொண்டு வரும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் இந்த திரி ஏகாதச யோகம் உருவாகவுள்ளது. அதுவும் ஒருமுறை இரண்டு முறை அல்ல, 6 முறை இந்த யோகம் உருவாகவுள்ளது.

அதில் பஞ்சாங்கத்தின் படி, முதலில் ஏப்ரல் 08 ஆம் தேதி இந்த யோகம் உருவாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13 ஆம் தேதியும், ஏப்ரல் 14 ஆம் தேதியும், ஏப்ரல் 16 ஆம் தேதியும், ஏப்ரல் 18 ஆம் தேதியும், கடைசியாக ஏப்ரல் 26 ஆம் தேதியும் உருவாகவுள்ளது.
இத்தனை முறை உருவாகும் யோகத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறனைக் கண்டு உயர் அதிகாரிகள் பதவி உயர்வை வழங்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மகரம்
ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகத்தால் மகர ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். இதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் அவசர முடிவுகளை எடுப்பதை விடுத்து, நிதானமாக எதையும் யோசித்து முடிவெடுத்தால் நல்ல பலனைப் பெறலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
விருச்சிகம்
ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் இலக்குகளை அடைந்து வெற்றி காண்பார்கள். நிதி நிலைமை வலுபெறும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

