Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Karaikudi Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி ஆகியவற்றை தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் காரைக்குடி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு சுவையும் பிரமாதமாக இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த காரைக்குடி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 15 பல்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 20
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த விழுது
* தக்காளி - 2 (அரைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, புளி, வரமிளகாய் ஆகியவற்றை
சேர்த்து அரைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று
அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் தக்காளியை நறுக்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான காரைக்குடி கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications