Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Jupiter Mercury Make Navpancham Rajyog On April 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியுமாவார். இப்படிப்பட்ட குரு பகவான் தற்போது புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூன் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார்.
இக்காலகட்டத்திற்குள் குரு பகவான் தனது பார்வை மூலமோ அல்லது நிலைகளின் மூலமோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்நிலையில் குரு பகவான் ஏப்ரல் முதல் வாரத்தில், அதுவும் ஏப்ரல் 03 ஆம் தேதி புதனுடன் சேர்ந்து ஒரு ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் நவபஞ்சம ராஜயோகம்.

இந்த ராஜயோகத்தின் போது புதனும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருக்கும். அதோடு இவ்விரு கிரகங்களும் 5 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு ஒருவருக்கொருவர் இருந்து தொடர்பு கொள்ளும் போதும், இந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திருமண மற்றும் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
தனுசு
குரு புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். வருமானத்தில் உயர்வுடன், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் இக்காலத்தில் கையில் எடுக்கும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



