Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
Monsoon Face Masks In Tamil: என்ன தான் மழைக்காலம் நன்கு குளுகுளுவென்று இருந்தாலும், இந்த மழைக்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிப்பது சற்று சவாலானதாக இருக்கலாம். ஏனெனில் அதிகரித்த ஈரப்பதம் காரணமாக சருமம் பொலிவிழந்து, எண்ணெய்ப் பசையுடன், பருக்கள் வரக்கூடியதாகவும் மாறுகிறது. இக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், அது சருமத்தின் இயற்கையான சமநிலையை சீர்குலைத்து, சருமத்தை உணர்திறன் மிக்கதாகவும் சீரற்றதாகவும் ஆக்குகிறது.

ஆனால் இந்த மழைக்கால சரும பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதம் இயற்கை தீர்வுகளை வழங்குகிறது. ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இயற்கை மூலிகைகள் மற்றும் சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்கள் சருமத்தை சுத்தப்படுத்தி, ஊட்டமளித்து, இயற்கையான பளபளப்பை பெற உதவுகின்றன.
மழைக்காலத்தில் உங்கள் முகம் பொலிவிழந்து இருப்பது போன்று உள்ளதா? அப்படியானால் கீழே மழைக்காலத்தில் சரும பொலிவை மேம்படுத்தி சரும அழகை பராமரிக்க உதவும் டாப் 5 ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வேப்பிலை மற்றும் துளசி ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வேப்பிலை பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் துளசி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் மழைக்காலத்தில் வரும் முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவும். மேலும் இது எண்ணெய் பசை மற்றும் முகப்பரு சருமத்தினருக்கு ஏற்றது.
2. தேன் மற்றும் மஞ்சள் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் பொலிவிழந்த மற்றும் சீரற்ற சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.
3. முல்தானி மெட்டி மற்றும் சந்தன ஃபேஸ் மாஸ்க்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.
4. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காயை சேர்த்து, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* சிறந்த பலனைப் பெற வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
5. கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை போக்க உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
