Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா?
Guru Vakra Nivarthi Palan 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையில் பின்னோக்கியும், வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மிதுன ராசியில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் மார்ச் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார்.

கடக ராசியை நோக்கி குருவின் நேரடி பயணம் ஆரம்பமாகிறது. கடக ராசியில் ஜூன் 1ஆம் தேதி குரு பகவான் உச்சமடையப் போகிறார். குருவின் நேரடி பயணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வருமானம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட நல்ல பலன்கள் கிடைக்கும், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். உங்கள் ராசிக்கு எப்படி என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் கடந்த சில மாதங்களாக தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். எதிர்காலம் குறித்த குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும் காலம் இது. குருவின் பார்வையால் நினைத்தது நிறைவேறும், முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும், குருவின் பயணமும், பார்வையும் சாதகமாக இருப்பதால் பணம் பல வழிகளில் இருந்தும் தேடி வரும்.
மிதுனம்
உங்கள் ராசியிலேயே குரு வக்ர நிவர்த்தி அடைவதால், ஆளுமைத் திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இது சரியான நேரம். குரு பகவானின் பார்வையால் தொட்டது துலங்கும் வெற்றிகள் கைகூடி வரப்போகிறது.
கடகம்
குரு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதிக்குத் திரும்பினாலும், பணம் விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஜூன் மாதம் உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சி அடையும் வரை சில உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்கள் இருக்கலாம்.
சிம்மம்
லாப தன ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குருவின் பார்வையால் வேலை கிடைக்கும், புரமோசனும், சம்பள உயர்வும் அதிகரிக்கும்.
கன்னி
பத்தாம் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகமாக இருக்கும். எடுத்த காரியங்களை முடிப்பதில் சிறு சிறு தாமதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
துலாம்
பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணம் செய்வதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக போக நினைத்த கோவிலுக்கு செல்வீர்கள். சொந்த பந்தங்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். அப்பாவின் ஆரோக்கியம் மேம்படும். குருவின் பார்வையால் சுப காரியங்கள் நடைபெறும்.
விருச்சிகம்
அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் இருந்த குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு பகவான் பார்வை சாதகமாக இருப்பதால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு
உங்கள் ராசி நாதனான குரு பகவான் 7ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
மகரம்
உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால் நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், தடைப்பட்டிருந்த பண வரவு சீராகும். சேமிப்பு உயரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குரு பகவானின் பார்வையால், வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால், வண்டி வாகன யோகம் கைகூடி வரப்போகிறது. தடைபட்டிருந்த சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். குடும்ப உறுப்பினர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட்டு கையெழுத்திட வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





