Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Jupiter Direct 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார்.
இப்படி குரு வக்ரமாக இருப்பதால், சில ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் பல சிரமங்களை சந்தித்திருக்கலாம். இந்நிலையில் குரு பகவான் வருகிற மார்ச் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். குரு பகவான் இப்படி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்று, ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளனர். இப்போது குரு வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பேச்சுத்திறன் மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இதுவரை மனதில் இருந்த அழுத்தங்கள் குறைந்து, மனநிலை மேம்படும். மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் கணிசமான வெற்றியைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். செல்வம் இருமடங்கு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
