Latest Updates
-
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Jupiter Venus Make Kendra Drishti Yog 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் சில சமயங்களில் கிரகங்களானது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணையும் போது, அது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, கூடுதல் தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக குரு பகவான் கருதப்படுகிறார். இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் குரு பகவானால் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அதுவும் குரு பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனுடன் சேர்ந்து இந்த யோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் கேந்திர திருஷ்டி யோகம்.

பொதுவாக கேந்திர திருஷ்டி யோகமானது ஒரு சக்திவாய்ந்த கிரக சேர்க்கையால் உருவாகக்கூடியது. அதுவும் கேந்திர வீடுகளான 1, 4, 7, 10 ஆகிய வீட்டின் அதிபதிகள் அல்லது கிரகங்கள் குறிப்பிட்ட நிலையில் இணையும்போது உருவாகிறது. இப்படிப்பட்ட கேந்திர திருஷ்டி யோகம் மார்ச் 18 ஆம் தேதி உருவாகப் போகிறது.
இந்த யோகமானது ஒருவரது தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை தருவதோடு, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரும். இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குரு பகவானின் ஆசியால் இக்காலத்தில் தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல நிதி நன்மைகளைத் தரும். சுக்கிரனின் அருளால் ஆளுமை மேம்படுவதோடு, கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. சுக்கிரனின் அருளால் நல்ல செழிப்பான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
சிம்மம்
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
துலாம்
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் வாழ்வில் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். உறவுகள் வலுவடையும். காதலில் வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். முக்கியமாக நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறையான எண்ணங்கள் அதிகம் மனதில் தோன்றும். இதனால் எப்பேற்பட்ட சூழ்நிலையையும் திறம்பட கையாண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதனால் பணப் பிரச்சனைகள் தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

