Latest Updates
-
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்..
Unhealthy Morning Habits In Tamil: நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான காலை பழக்கங்கள் இருக்கும். பொதுவாக காலையில் வைத்துக் கொள்ளும் சில பழக்கங்களானது அந்த தினத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. மேலும் நமது காலை பழக்கங்களானது உடல் ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, காலையில் எழும் போது நமது உடலை எப்படி வைத்துக் கொள்கிறோமோ, அது இதய ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் அதிகாலை பொழுதில் பெரும்பாலான மாரடைப்பு மற்றும் பக்கவாத சம்பவங்கள் நிகழ்கின்றன. அதுவும் சில மோசமான காலை வழக்கங்களை ஒருவர் கொண்டிருந்தால், அது உடலில், குறிப்பாக இதயத்தில் தீவிரமான சேதத்தை ஏற்படுத்தும்.
சரி, அப்படி எந்த மாதிரியான காலை பழக்கங்களை ஒருவர் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்காக இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க காலை வேளையில் வைத்துக் கொள்ளக்கூடாத 5 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம்.
1. போதுமான நீர் அருந்தாமல் இருப்பது
நமது உடலானது சுமார் 60 சதவீதம் நீரால் ஆனது என்பதால், உடலுறப்புகள் சிறப்பாக செயல்பட போதுமான அளவு நீரை தினமும் ஒரு அருந்த வேண்டும். ஒருவேளை நீரை அருந்தாமல் இருந்தால், அது உடல் ஆரோக்கியத்தை, குறிப்பாக இதயத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுவும் உடலில் லேசாக நீரிழப்பு ஏற்பட்டாலே, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள இதயம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், சோடியத்தின் அளவு அதிகரித்து, இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து, நாளடைவில் மோசமான இரத்த ஓட்டத்தால் இதய நோயின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே இதை தவிர்க்க காலையில் எழுந்ததும் போதுமான அளவு நீரை அருந்துங்கள்.
2. வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வது
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது தான். ஆனால் அப்படி கடுமையான உடற்பயிற்சியில் எடுத்தவுடனேயே ஈடுபடாமல், சிறிது வார்ம்-அப் செய்துவிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் அது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடும். ஏனெனில் ரிலாக்ஸாக இருக்கும் இதய இரத்த குழாய்களின் மீது திடீர் மற்றும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே இதைத் தவிர்க்க காலையில் வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
3. இரத்த அழுத்த அளவை கவனிக்காமல் இருப்பது
ஏற்கனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், தவறாமல் இரத்த அழுத்த அளவுகளை கவனித்து வர வேண்டும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தமானது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடிய அளவில் ஆபத்தானது. இதை கவனிக்காமல் விடும் போது, அது இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். ஏனெனில் பெரும்பாலும் காலையில் தான் இரத்த அழுத்த அளவுகள் உச்சத்தை அடையும். எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் காலையில் தினமும் ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்து வந்தால், இதய பிரச்சனையைத் தடுக்கலாம்.
4. காலையில் சோடியம், கலோரி உணவை உண்பது
நாம் காலையில் சாப்பிடும் உணவு தான் அன்றைய தினத்திற்கான மனநிலையை தீர்மானிக்கிறது. எனவே அப்படியிருக்க காலையில் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதுவும் காலை உணவாக சோடியம் நிறைந்த ஜங்க் துரித உணவுகளைச் சாப்பிடுவது, நீண்ட கால அடிப்படையில் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் ஆய்வுகளின் படி, சோடியம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்ளும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
5. காலை உணவை தவிர்ப்பது
அடிக்கடி காலை உணவை தவிர்ப்பீர்களா? அப்படியானால் இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். ஆய்வுகளின் படி, காலை உணவை சாப்பிடாமல் இருப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைச் சீராக்கும், இரத்தச் சர்க்கரையை நிர்வகிக்கும் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவி புரியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications