Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
உடற்பயிற்சியின் போது இந்த அறிகுறிகள் தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. அது மாரடைப்பின் அறிகுறி.. உஷார்..
Heart Attack Signs In Tamil: சமீப காலமாக மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதுவும் உடற்பயிற்சி செய்யும் போது நிறைய பேருக்கு மாரடைப்பு ஏற்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இதைப் பார்க்கும் போது உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வந்துவிடுமா என்ற கேள்வி தான் பலருக்கும் எழுகிறது.
ஆனால் ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது அதிகப்படியான உடல் செயல்பாடுகளை மேற்கொண்டாலோ, உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. முக்கியமாக ஒருவருக்கு உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டால், அது ஒருசில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே வெளிக்காட்டும்.

இப்படி வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை கவனித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால், சிகிச்சை பலனின்றி உயிரை இழக்க நேரிடும். கீழே உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் மாரடைப்பின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
1. தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி
உடற்பயிற்சியின் போது திடீரென்று தலைச்சுற்றலை சந்தித்தாலோ அல்லது தலைச்சுற்றுவது போன்ற உணர்வை அனுபவித்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத போது, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக தலைச்சுற்றலை சந்திக்க நேரிடுகிறது. எனவே இப்படியான தலைச்சுற்றலை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. சுவாசிப்பதில் சிரமம்
உடற்பயிற்சி செய்யும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவது சாதாரணமானது தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சுவாசிப்பதில் அதிக சிரமத்தை சந்தித்தால், இதயத்தில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இதயத்துடிப்பு மோசமாக இருந்தால், நுரையீரலுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல், இப்படியான மூச்சுத்திணறலை சந்திக்க நேரிடும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
உடற்பயிற்சி செய்யும் போது திடீரென்று மிகுந்த உடல் சோர்வை உணர்ந்தாலோ அல்லது உடல் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தாலோ, அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் மாரடைப்பு வரும் முன், நிறைய பேர் இப்படியான மிகுந்த உடல் சோர்வை சந்தித்துள்ளனர். எனவே எந்த உடல் உழைப்பும் இல்லாமல் உடற்பயிற்சியின் போது மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், இதயத்தில் பிரச்சனை உள்ளது, மாரடைப்பு வரப்போகிறது என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. அதிக வியர்வை
உடற்பயிற்சி செய்யும் போது வியர்ப்பது சாதாரணம் தான். ஆனால் காரணமில்லாமல் திடீரென்று அதிகமாக வியர்வை வெளியேறி உடுத்திய உடை நனைந்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். எப்போது இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டுமோ அல்லது உடல் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதோ, இப்படி அதிகமாக வியர்க்கும்.
5. கை, தோள்பட்டை, தாடையில் வலி
பொதுவாக மாரடைப்பின் முக்கியமான அறிகுறி நெஞ்சு வலி. ஆனால் சில சமயங்களில் அந்த நெஞ்சு வலி கைகள் வரை, அதுவும் இடது கை, தோள்பட்டை மற்றும் தாடை வரை பரவும். எனவே உடற்பயிற்சியின் போது இடது கை, இடது தோள்பட்டை அல்லது தாடையில் வலியை சந்தித்தால் அல்லது இறுக்கமாக உணர்ந்தால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, மருத்துவரை சந்தியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications