Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
Rahu Transit In Avittam Nakshatra On 02 August 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பவர் மற்றும் ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை. மேலும் இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

தற்போது ராகு கும்ப ராசியிலும், சமயம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 02 ஆம் தேதி ராகு அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைந்து தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ராகுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதத்தில் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக தொழிலில் முன்னேற்றத்தையும், வருமானத்தில் உயர்வையும் தருவதாக இருக்கலாம்.
வேத ஜோதிடத்தின் படி, அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரமானது செல்வம், கௌரவம், தைரியம், வெற்றி ஆகியவற்றுடன் தொடர்புடைய மங்களகரமான நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தொழில், முதலீடுகள், வியாபாரம், வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலையில் புதிய வாய்ப்புக்களை கொண்டு வரலாம். இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் ஆகஸ்ட் மாதத்தில் ராகுவின் அருளால் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். டிஜிட்டல், ஆன்லைன் துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலை உயரும்.
மகரம்
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, அவை கைக்கு வந்து சேரும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

