Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்!
6 Planets Released From The Trap Of Rahu Ketu: ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இதில் தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். இந்த நேரத்தில் சூரியன், குரு மற்றும் சந்திரன் கடக ராசியிலும், செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் மிதுன ராசியிலும், சுக்கிரன் சிம்ம ராசியிலும், சனி மீன ராசியிலும் உள்ளனர்.

இவ்வாறு அனைத்து கிரகங்களும் தற்போது ராகு, கேதுவிற்கு இடையில் பயணிக்கின்றன. இப்படி முக்கியமான கிரகங்கள் ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் இருப்பதால், அந்த கிரகங்களின் செல்வாக்கு சற்று குறைந்து, சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகளில் தடை ஏற்பட்டு, வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைகளையும் எதிர்கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஜூலை 19 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைந்து, ராகு கேதுவின் மாயையை உடைக்கிறார். இந்த சந்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கப் போகிறது. அதாவது அந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தையும், நிதி நிலையில் உயர்வையும் காணவுள்ளனர். இப்போது ஜூலை 19 முதல் ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால் இதுவரை பேச்சால் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறையலாம். பணியிடத்தில் எவ்வித மனக்குழப்பமுமின்றி திறம்பட முடிவெடுக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணக்கூடும். மனக்குழப்பம் நீங்கி, மனம் தெளிவு பெறும்.
கடகம்
ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால், கடக ராசிக்காரர்கள் இதுவரை மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்திருந்தால், அதிலிருந்து வெளிவருவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். இதுவரை முடிவுகளை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தால், இனி குழப்பமின்றி தெளிவாக எடுப்பீர்கள். பணியிடத்தில் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
மீனம்
ராகு-கேதுவின் பிடியில் இருந்து சந்திரன் வெளியே வருவதால் மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். மன அழுத்தம் குறையும். பணியிடத்தில் மற்றும் குடும்பத்தில் உங்களின் பொறுப்புக்களை திறம்பட செய்வீர்கள். பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவதோடு, பண வரவு அதிகரித்து, நிதி நிலைமை மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



