Latest Updates
-
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம்
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க!
Instant Aval Idli With Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி சுட மாவு இல்லையா? சட்டென்று ஒரு டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு இட்லி செய்யுங்கள். இந்த இட்லிக்கு தக்காளி சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் காம்போ காலையில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் அவல் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருள் என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவும் கூட.

உங்களுக்கு இந்த அவல் இட்லியும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் இட்லி, தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அவல் இட்லிக்கு...
* அவல் - 1 கப்
* லேசாக புளித்த தயிர் - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* ரவை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தக்காளி சட்னிக்கு...
* தக்காளி - 4
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
சட்னி தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* அரைத்த சட்னி
* வெல்லம் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் லேசாக புளித்த தயிரை சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை
ஊற்றி நன்கு கலந்து மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த அவலை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி
சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 கப் ரவையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து
நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* மாவு கெட்டியாக இருந்தால், 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி
வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மாவை நன்கு கலந்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு இட்லி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டை எடுத்து, குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து
வைத்துள்ள மாவை குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, இட்லி
பாத்திரத்தினுள் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
அவல் இட்லி தயார்.
* அடுத்து தக்காளி சட்னி செய்வதற்கு, மிக்சர் ஜாரில் தக்காளியை
நறுக்கி சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த
சட்னியை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 5 நிமிடம்
பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, மீண்டும் ஒரு 5 நிமிடம்
மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications