Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Aval Paniyaram With Coconut Chutney Recipe In Tamil: காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று ருசியான அதே சமயம் சத்தான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு காய்கறிகள் சேர்த்து அவல் குழிப்பணியாரம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியை சேர்த்து சாப்பிடுங்கள். இப்படி செய்யும் சட்னிக்கு எத்தனை பணியாரம் சாப்பிட்டாலும் இன்னும் சாப்பிடத் தோன்றும்.

உங்களுக்கு இந்த அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் குழிப்பணியாரம், தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்படுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்நுது
தேவையான பொருட்கள்:
அவல் பணியாரத்துக்கு...
* கெட்டி அவல் - 1 கப்
* லேசாக புளித்த கெட்டி தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப் + 1/2 கப் + தேவையான அளவு
* கடலை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* தேங்காய் - 1/2 மூடி
* சின்ன வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* முந்திரி - 6
* சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து, நீரில் 2 முறை கழுவிக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் கெட்டி தயிரை சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி
நன்கு கிளறி, மூடி வைத்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யுங்கள். அதற்கு மிக்சர் ஜாரில் நறுக்கிய
தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி, சர்க்கரை,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், ஹோட்டல்
ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.
* அடுத்து மிக்சர் ஜாரில் ஊற வைத்த அவலை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
கடலை மாவு, அரிசி மாவு, ரவை, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான
அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை
மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் எண்ணெயை
ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான அவல் குழிப்பணியாரம்
தயார்.
ஊட்டச்சத்து மதிப்புகள்
4 பணியாரங்கள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:
* கலோரிகள் : 210-240 kcal
* புரதச்சத்து : 5 - 6 கிராம் (கடலை மாவு, தயிர்
மற்றும் முந்திரியிலிருந்து)
* கார்போஹைட்ரேட் : 32 - 36 கிராம்
* நார்ச்சத்து : 3 - 4 கிராம் (காய்கறிகள் மற்றும்
அவலிலிருந்து)
* கொழுப்பு : 7 - 9 கிராம் (பணியாரம் சுட
பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் சட்னியிலிருந்து)



Click it and Unblock the Notifications
