3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்...

Posted By:

Kathirikai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசையைத் தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? சற்று வாய்க்கு ருசியான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

Kathirikai Chutney How To Make Brinjal Chutney For Idli Dosa

உங்கள் வீட்டில் 3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் உள்ளதா? அப்படியானால் இவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். பொதுவாக கத்திரிக்காய் சட்னியை பல ஸ்டைலில் செய்வார்கள். அதில் ஒன்று தான் இந்த கத்திரிக்காய் சட்னி. நிச்சயம் இது மற்றதை விட சுவையில் வேறுபட்டு இருக்கும்.

உங்களுக்கு இந்த கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* நறுக்கிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 3 (மெல்லிய நீள துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு மற்றும் கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இன்னும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி ஒருமுறை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், புளியை சேர்த்து வதக்கி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து, கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, காய்கறிகளை கிளறி விட்டு, கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு சற்று பெரிய மிக்சர் ஜாரை எடுத்து, அதில் முதலில் வறுத்த பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

ஊட்டச்சத்து மதிப்புகள்

3 டேபிள் ஸ்பூன் கத்திரிக்காய் சட்னியில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

* கலோரிகள் : ~75-90 kcal (குறைந்த கலோரி கொண்டது)

* புரதச்சத்து : 2 - 2.5 கிராம் (கருப்பு உளுந்து மற்றும் கடலைப்பருப்பிலிருந்து)

* கார்போஹைட்ரேட் : 6 - 8 கிராம்

* நார்ச்சத்து : 2.5 - 3 கிராம் (அதிக நார்ச்சத்து)

* கொழுப்பு : 4.5 - 5.5 கிராம் (தேங்காய் மற்றும் எண்ணெயிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு)

[ of 5 - Users]
Story first published: Monday, July 13, 2026, 6:37 [IST]
Desktop Bottom Promotion