Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
வீட்டுல கத்திரிக்காய் இருக்கா? இந்த மாதிரி ஒரு கடையல் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்..
Kathirikai Thakkali Kadayal Recipe In Tamil: உங்க வீட்டுல கத்திரிக்காய் நிறைய இருக்கா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கத்திரிக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? எப்போது கத்திரிக்காயை சமைத்தாலும் அதை மட்டும் ஒதுக்கி வைப்பார்களா? அப்படியானால் அடுத்தமுறை கத்திரிக்காயுடன் தக்காளியை சேர்த்து ஒரு கடையல் செய்யுங்கள்.
இந்த கத்திரிக்காய் தக்காளி கடையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கடையலை செய்தால், கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு கத்திரிக்காய் தக்காளி கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரக்காய் தக்காளி கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 200 கிராம்
* தக்காளி - 200 கிராம்
* வெங்காயம் - 100 கிராம்
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 8 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கல் உப்பு - 1/2டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு பற்களைப் போட்டு நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு கொத்தமல்லி மற்றும் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து நன்கு வேக வைத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, ஒருமுறை அடித்து
இறக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக மென்மையாக
அரைத்துவிடாதீர்கள்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக
வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் தக்காளி கடையல் தயார்.
Image Courtesy: The Indian Home



Click it and Unblock the Notifications
