Latest Updates
-
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம்
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவை ஆண்ட முக்கிய வம்சங்களில் ஒன்றான மௌரிய வம்சத்தின் அரசியல் குருவாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் சிறந்த இராஜதந்திரி என புகழ்பெற்ற நபர். வாழ்க்கை, வணிகம், சமூக வாழ்க்கை, ஒழுக்கம், பொருளாதாரம் போன்ற பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரக்கூடியது. பொதுவாக மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது அதை இரட்டிப்பாக்குகிறது, அதேவேளையில், துயரத்தைப் பகிர்ந்துகொள்வது அதை பாதியாகக் குறைக்கிறது. மகிழ்ச்சியான வாழ்விற்குத் தேவையான பல அறிவுரைகளையும், கோட்பாடுகளையும் சாணக்கியர் வழங்கியுள்ளார்.
இக்கட்டான சூழல்களை எப்படிக் கையாள்வது மற்றும் அதிலிருந்து எப்படி முன்னேறிச் செல்வது என்பது குறித்த தனது கருத்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நமக்கு நம்பிக்கை அளித்து, நம்முடன் உறுதுணையாக நிற்கும் சிலர் உள்ளனர். அவர்களை நாம் ஒருபோதும் நம்மை விட்டு விலக்கி வைக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் நம் வாழ்க்கையில் இருப்பது கடவுளின் ஆசீர்வாதம். நம் வாழ்வில் அந்த மூவரும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்? அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்திசாலி மனைவி
புத்திசாலித்தனமும், உணர்வுப்பூர்வமான புரிதலும் கொண்ட மனைவி ஒருவருக்கு கிடைப்பது என்பது பெரும் பாக்கியம். இக்கட்டான சூழல்களில், அத்தகைய மனைவிகள் தங்கள் கணவருக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு துணையாக நிற்கிறார்கள். அதுமட்டுமின்றி, தங்கள் கணவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கடினமான தருணத்தையும் உறுதியுடன் எதிர்கொள்ளவும், அத்தகைய சூழல்களை எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை அளிக்கவும் அவர்கள் உதவியாக இருப்பார்கள். நெருக்கடியான காலங்களில், அவர்கள் குடும்பத்தின் பாதுகாப்பு கவசமாக திகழ்வார்கள். உணர்வுப்பூர்வமான புரிதலும், புத்திக்கூர்மையும் கொண்ட மனைவி அமைவது ஒரு ஆணின் அதிர்ஷ்டம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பொறுப்பான மகன்
குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோருக்குத் துணையாக நிற்க வேண்டும். தங்கள் குழந்தைகள் எப்போதும் நற்பண்புகளுடன் திகழ வேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் விருப்பமாகும். ஒரு மகன் எப்போதும் சமூகத்தில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டால், அவர்கள் பெற்றோர்களின் முதுமைக்காலத்தில் அவர்களுக்கு பெரும் பலமாகத் திகழ்வார்கள். தங்கள் குழந்தைகளிடம் எவ்விதமான தீய பழக்கவழக்கங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது குழந்தைகளுக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்கும் நல்லதாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, அத்தகைய மகனைக் கொண்ட பெற்றோர் ஒருபோதும் துயரப்பட வேண்டியிருக்காது. இக்கட்டான சூழல்களில் அத்தகைய மகன் ஒருபோதும் தங்கள் பெற்றோர்களை நிர்கதியாக விட்டுவிடமாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
உண்மையான நண்பர்கள்
ஒருவர் தங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக்கொள்ளும் நட்பும் உறவுகளுமே அவரது வாழ்க்கையையும், சமூகத்தில் அவர்களின் நிலையையும் தீர்மானிக்கின்றன. நல்ல நண்பர்கள் கிடைத்தால், ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றமடைந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். ஏனெனில், அத்தகைய நண்பர்கள் உங்களை தவறான பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் சுயநலமின்றி உங்கள் நலனையே விரும்புவார்கள். அப்படிப்பட்ட நண்பர்களின் நட்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். நல்ல நண்பர்களே ஆபத்தான காலங்களில் உங்களுக்குத் துணையாக நிற்பார்கள் என்று சாணக்கியர் வலியுறுத்தியுள்ளார் . நாம் ஒருபோதும் அத்தகைய நண்பர்களின் நட்பைக் கைவிடக்கூடாது. ஏனெனில், அவர்கள் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார்கள் என்று சாணக்கியர் நம்பினார்.



Click it and Unblock the Notifications

