Latest Updates
-
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா?
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Saturn Mars Make lab Drishti Yoga On 19 July 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். அப்படி கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமின்றி, அவற்றின் நிலைகள் மற்றும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும், கிரகங்களின் தளபதியான செவ்வாயும் ஜூலை மாதத்தில் லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர். அதுவும் இந்த யோகத்தின் போது சனியும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 60 டிகிரி கோணத்தில் இருப்பர். இந்த சக்தி வாய்ந்த கிரகங்களின் நிலைகளால் உருவாகும் யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக இவ்விரு கிரகங்களால் உருவாகும் யோகமானது முன்னேற்ற பாதையை திறக்கும் மற்றும் பண வரவை அதிகரித்து நிதி நிலையில் உயர்வை ஏற்படுத்தும். இப்போது சனி செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
சனி செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். மன உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
சனி செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். பணியிடத்தில் பெரிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் எந்த ஒருவேலையையும் பயமின்றி செய்ய முடியும்.
விருச்சிகம்
சனி செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக மனதில் இருந்த அழுத்தம் குறையும். குழப்பமின்றி எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மேஷம்
சனி செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் செயல்திறனைக் கண்டு உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். சிலருக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம் மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து திடீரென்று நல்ல லாபம் கிடைக்கும். பெரிய அளவில் லாபத்தைத் தரும் புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு வருவார்கள். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


