Latest Updates
-
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும்
மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது..
Mars Transit In Gemini On 02 August 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ஜூலை மாதம் முழுவதும் இருப்பார். அதன் பின் ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். செவ்வாய் புதனின் ராசிக்கு செல்வதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். ஆனால் 3 ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



