Latest Updates
-
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும்
Aadi Velli Special Aadi Paal Recipe in Tamil: ஆடி மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதமாகும். இந்த வருட ஆடி மாதம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த மாதத்தின் முதல் நாளே வெள்ளிக்கிழமை வருகிறது. ஆடி வெள்ளிக்கிழமை நாளில் சிலர் தங்கள் வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். அப்போது அம்மனுக்கு பிரசாதமாக படைப்பதற்கு பாயாசம், வடை, சுண்டல் என்று செய்வார்கள். நீங்கள் ஆடி வெள்ளியில் அம்மனுக்கு ஒரு எளிய மற்றும் சுவையான பிரசாதத்தை வைத்து வழிபட நினைத்தால் இந்த ஆடி பால் செய்து படையுங்கள்.

இந்த ஆடி தேங்காய்ப் பால், ஆடி மாதத்தில் அம்மனுக்கு செய்து படைக்கும் ஒரு வித்தியாசமான பிரசாதமாகும். இந்த ஆடி பால் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இதில் தேங்காய் பால் அதிகம் சேர்ப்பதால், வயிற்றுப் புண் இருந்தால் அது குணமாகும், செரிமான பிரச்சனைகள் நீங்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.
உங்களுக்கு ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய்ப் பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துருவிய தேங்காய்
- ஒன்றரை கப் மிதமான சூடுள்ள தண்ணீர்
- ½ கப் பொடித்த வெல்லம்
- ½ தேக்கரண்டி அரிசி மாவு
- 1 ஸ்பூன் ஏலக்காய் பொடி
- 10 முந்திரிப் பருப்புகள்
- 1 ஸ்பூன் நெய்
- ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை:
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ¾ கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு, அதை நன்றாக, மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தின் மீது வடிகட்டியை வைத்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றவும்.
- அதன்பின் தேங்காயை நன்றாக பிழிந்து கெட்டியான தேங்காய்ப் பாலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள தேங்காய் சக்கையுடன் மீண்டும் ஒரு கப் வெதுவெதுப்பான நீரைச் சேர்க்கவும்.
- இதை மீண்டும் பிழிந்து, இரண்டாவது முறையாகத் தேங்காய்ப்பாலை எடுக்கவும். இந்த நீர்த்த தேங்காய்ப்பாலையும் தனியாக எடுத்து வைக்கவும்.
- பிறகு, ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் 3 ஸ்பூன் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளவும்.
- அதை நன்கு கொதிக்க வைத்து, வெல்லம் அதில் முழுமையாகக் கரையும் வரை கிளறவும்.
- அதனை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
- இந்த வெல்லப்பாகுடன் இரண்டாவது முறை பிழிந்த தேங்காய்ப் பாலை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இதை மிதமான தீயில் வைத்துக் கொதிக்க விடவும்.
- ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நீரில் அரிசி மாவைக் கரைத்து அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இதை பாத்திரத்தில் கொட்டி நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, இறுதியாகக் கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும்.- தீயைக் குறைவாக வைத்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- இதை தேங்காய்ப்பாலுடன் சேர்த்து கிளறினால் 'ஆடிப் பால்' தயார்.



Click it and Unblock the Notifications