Latest Updates
-
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும்
Aadi Velli Special Manjal Pongal Recipe in Tamil: தமிழ் மாதங்களிலேயே மிகவும் முக்கியமான ஆடி மாதம் வரப்போகிறது. அம்மனை வழிபடுவதற்கும், குலதெய்வத்தை வழிபடுவதற்கும் ஆடி மாதம் சிறந்த மாதமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கிழமைகளில் மக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, பிரசாதத்தை சமைத்து படைத்து வழிபட்டு வருவார்கள்.

பிரசாதம் என்பது நம்மால் முடிந்த ஏதாவது ஒன்றை செய்து படைப்பது தான். அந்த வகையில் ஆடி மாதத்தில் மஞ்சள் பொங்கல் என்பது மிகவும் பிரபலமான உணவாகும். இந்த மஞ்சள் பொங்கலை செய்வதற்கு குறைவான பொருட்களே போதுமானது. இந்த செட்டிநாடு ஸ்பெஷல் மஞ்சள் பொங்கல் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. இந்த மஞ்சள் பொங்கலை ஆடி மாதம்தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, சாதாரண நாட்களில் கூட கூட காலை உணவாகவும், இரவு உணவாகவும் செய்யலாம்.
உங்களுக்கு ஆடி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்பெஷல் மஞ்சள் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரஷர் குக்கரில் வேகவைக்க:
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 1/4 கப் அரிசி
- 1 1/4 கப் தண்ணீர்
- 1/2 டீஸ்பூன் நெய்
பொங்கல் செய்ய:
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/4 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1/2 டேபிள் ஸ்பூன் நெய்
- 5 முந்திரிப் பருப்புகள்
- சிறிது கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1/4 டீஸ்பூன் துருவிய இஞ்சி
செய்முறை:
- முதலில், அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாகக் கழுவவும்.
- இதை ஒரு குக்கருக்கு மாற்றி தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் நெய்யை சேர்க்கவும்.
- குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து, பின் 1 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும், தானாகவே அழுத்தம் குறையும் வரை காத்திருக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும், மேலும் தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கலந்து மசிக்கவும்.
- மிளகு மற்றும் சீரகத்தை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் நெய் ஊற்றிச் சூடாக்கவும். நெய் சூடானதும் முந்திரிப் பருப்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகக் கலந்து வதக்கவும்.
- முந்திரி பொன்னிறமாக மாறத் தொடங்கும்போது, இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் மற்றும் துருவிய இஞ்சியைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுப்பை அணைக்கவும்.
- இறுதியாக பெருங்காயம் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இதை பொங்கலில் கொட்டி நன்கு கிளறினால் சுவையான செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெடி!



Click it and Unblock the Notifications
