Latest Updates
-
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா?
ஆங்கிலேயர்களுக்கு முன் முகலாயர்கள் கிட்டதட்ட 300 ஆண்டுகளாக இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி பேரரசை விரிவுபடுத்தினர். இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு பாபர் அடித்தளம் அமைத்தார். அக்பரின் ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசு அசுர வளர்ச்சி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசு அதன் உச்சபட்ச அதிகாரத்தை எட்டியது. முகலாயப் படைகள் இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றின.

காபூல் முதல் காவிரிப் பள்ளத்தாக்கு வரையிலும், குஜராத் முதல் வங்காளம் வரையிலும் முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றை மட்டும் முகலாயர்கள் நெருங்கவில்லை, அதைத் கைப்பற்றும் துணிச்சல் முகலாயர்களுக்கு வரவில்லை. அதுமட்டுமின்றி, ஆங்கிலேயர்களும் அந்த நாட்டை பலமுறை கைப்பற்ற முயன்று தோல்வியைச் சந்தித்தார்கள். அது இப்போதும் நமது அண்டை நாடாக இருக்கும் நேபாளம். இந்த பதிவில் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் ஏன் நேபாளத்தை கைப்பற்ற முயன்று தோற்றார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடினமான நிலப்பரப்பு
நேபாளத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்தது அதன் புவியியல் இருப்பிடம்தான். உலகின் மிக உயர்ந்த பத்து மலைச் சிகரங்களில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளதால், அந்நாட்டைக் கைப்பற்றுவது பல ராஜ்ஜியங்களுக்கு எப்போதும் ஒரு சவாலான காரியமாகவே இருந்தது. முகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், போர்கள் பெரும்பாலும் குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் யானைகளைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டன. எனவே அங்குள்ள உயர்ந்த மலைகள் அவர்கள் போரிடுவதை கடினமாக்கின. இமயமலையின் கடும் குளிரில் தங்கள் படையை ஆபத்தில் சிக்க வைக்க முகலாயர்கள் விரும்பவில்லை. நேபாளத்தின் பிரம்மாண்டமான மலைகளைக் கடப்பது முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் மிகவும் கடினமான பணியாக இருந்தது. முகலாயர்களுக்கும் முன்னால் கூட நேபாளத்தின் மீது கண் வைத்தவர்கள் இத்தகைய சிக்கல்களால் போரில் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. துணிச்சலான கூர்க்கா வீரர்கள் அவர்களை விரட்டியடித்தனர்.
பொருளாதார பிரச்சினை
நேபாளத்தைக் கைப்பற்றுவது என்பது பொருளாதாரரீதியாக பெரிய சுமையை ஏற்படுத்துவதாக இருந்தது. நேபாளம் போன்ற இயற்கை அரண் நிறைந்த ஒரு நாட்டின் மீது படையெடுப்பதற்குப் பெருமளவிலான வளங்கள் தேவைப்பட்டன; ஆனால், அதிலிருந்து கிடைக்கும் பலன்கள் அந்த அளவுக்கு லாபகரமானதாக இல்லை. நேபாளம் பொருளாதாரரீதியாக வலிமையான நாடாக இருந்தாலும், அவர்கள் மீது படையெடுப்பது அதிகச் செலவை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்திற்காக பெரிய தொகையை செலவழிக்க விரும்பவில்லை.
வர்த்தக சிக்கல்கள்
திபெத்துடனான முகலாய வர்த்தகத்திற்கு நேபாளம் ஒரு சிறந்த பாதையை வழங்கியது. அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியிருந்தால், திபெத்துடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கும். நேபாளத்தின் மீது செய்யப்படும் தாக்குதல் திபெத்துடனான வர்த்தகத்துடன் மட்டும் நின்றுவிடாமல், லடாக் மற்றும் இமயமலைப் பகுதியிலுள்ள பிற மாநிலங்களில் இருந்த முகலாயப் பொருளாதாரத்தையும் பாதித்திருக்கும். நேபாளத்தின் மல்லா சமூகத்தினருக்கும் முகலாயர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியது. அதை கெடுத்துக் கொள்ள முகலாயர்கள் விரும்பவில்லை.
ஆங்கிலேயர்களின் முயற்சி
பிரிட்டிஷார் நேபாளத்தைக் கைப்பற்றக் கடுமையாக முயன்ற போதிலும், அந்த முயற்சியில் தோல்வியடைந்தனர். அதுமட்டுமின்றி, அவர்கள் நேபாள ஆட்சியாளருடன் சில சிறப்பு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டனர். 1814-ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்களுக்கும், நேபாளிகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. புவியியல் சூழல் காரணமாக, இந்தப் போரில் பிரிட்டிஷார் எதிர்பார்த்ததை விட அதிக காலம் செலவிட வேண்டியிருந்தது. மேலும், போர்க்களத்தில் கூர்க்காக்கள் பிரிட்டிஷாருக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கினர். இதனால் அவர்கள் நேபாளிகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.



Click it and Unblock the Notifications

