Latest Updates
-
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க...
Skin Care Tips In Tamil: தற்போது சரும அழகை பராமரிப்பதற்கு ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் மார்கெட்டுகளில் கிடைக்கின்றன. மக்களும் தங்களின் அழகை மேம்படுத்த அதிக பணம் கொடுத்து அந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் சரும அழகை மேம்படுத்த இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நம் வீட்டு சமையலறையிலேயே சரும அழகை பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சில பொருட்கள் உள்ளன. அதில் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவை இருப்பதால், இவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
இதன் காரணமாக இது பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட மஞ்சளைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், அதிக செலவு செய்யாமல் சரும அழகை மேம்படுத்தலாம். இப்போது அந்த மஞ்சள் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மஞ்சள், அரிசி மாவு, பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவாக இருக்கும்.
2. மஞ்சள் மற்றும் எலுமிச்சை பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் கருமையாக இருக்கும் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, சருமத்தை பொலிவோடும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
3. மஞ்சள், கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உவும்.
4. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
5. மஞ்சள், தேங்காய் எண்ணெய், அரிசி மாவு மற்றும் கடலை மாவு பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூள், கடலை மாவு மற்றும் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
