Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
Skin Care Tips In Tamil: நம் ஒவ்வொருவருக்குமே ஒவ்வொருவிதமான சருமம் இருக்கும். இந்த சரும வகைக்கேற்ப பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இன்னும் பலர் தங்கள் சரும வகைக்கேற்ப எந்த ஒரு பராமரிப்பையும் சரியாக கொடுப்பதில்லை. இதன் விளைவாக பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பொதுவாக சரும அழகை மேம்படுத்த மேற்கொள்ளும் ஒன்று தான் ஃபேஸ் பேக் போடுவது. இந்த ஃபேஸ் பேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அரிசி மாவு ஃபேஸ் பேக். இந்த அரிசி மாவு தான் ஜப்பான் மற்றும் கொரிய பெண்களின் ரகசிய அழகு பொருள். அவர்களின் அழகு பராமரிப்பு பொருட்களில் இந்த அரிசி மாவு ஒரு முக்கிய மூலப்பொருளாக திகழ்கிறது.
ஏனெனில் அரிசி மாவில் ஃபெரூலிக் அமிலம் மற்றும் அலன்டோனின் போன்ற பொருட்கள் உள்ளன. இவை சருமத்திற்கு நல்ல பொலிவை தருவதோடு, சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றன. இப்போது எந்த வகை சருமத்தினர் மற்றும் எந்த சரும பிரச்சனையைக் கொண்டவர்கள், அரிசி மாவைக் கொண்டு எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பதைக் காண்போம்.
1. அரிசி மாவு மற்றும் வெங்காய சாறு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டீஸ்பூன் க்ரீன் காபி தூள், 3 துளிகள் லெமன் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள், சரும கருமை போன்றவற்றை நீக்கும்.
* இந்த ஃபேஸ் பேக்கை தினமும் என தொடர்ந்து 3 மாதங்கள் பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. அரிசி மாவு மற்றும் பீட்ரூட் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், பீட்ரூட் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 4-5 முறை பயன்படுத்தலாம். இது சாதாரண சருமத்தினருக்கும், பொலிவிழந்த சருமத்தினருக்கும் ஏற்றது.
3. அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 3 துளிகள் டீ-ட்ரீ ஆயில், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* எண்ணெய் பசை சருமத்தினர் மற்றும் முகப்பரு அதிகம் உள்ளவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தலாம். இதன் மூலம் முகப்பரு தடுக்கப்படும் மற்றும் எண்ணெய் உற்பத்தியும் கட்டுப்படும்.
4. அரிசி மாவு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மாவு, 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தினர் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமம் நீரேற்றத்துடனும், மென்மையாகவும் இருக்கும்.
5. அரிசி மாவு மற்றும் காபித் தூள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் காபித் தூள் மற்றும் பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அனைத்து வகை சருமத்தினரும் இந்த ஃபேஸ் ஸ்க்ரப்பை 10 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
